Home நாடு டான்ஸ்ரீ ஜி.வடிவேலு 92-வது வயதில் காலமானார்

டான்ஸ்ரீ ஜி.வடிவேலு 92-வது வயதில் காலமானார்

204
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளரும்,
நாடாளுமன்ற மேலவை முன்னாள் அவைத் தலைவருமான
டான்ஸ்ரீ ஜி.வடிவேலு அவர்கள் நேற்று சனிக்கிழமை ( அக்டோபர் 19) தனது 92-வது வயதில் காலமானார்.

1974, 1978-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் அவர் புக்கிட் ராஜா சட்டமன்ற உறுப்பினராக மஇகா-தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர், செனட்டராக, நாடாளுமன்ற மேலவையின் அவைத் தலைவராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

எம்ஐஇடி அறவாரியத்திலும், டேஃப் கல்லூரி நிர்வாக வாரியத்திலும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

கெர்க்பி என்னும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று ஆசிரியராகத் தனது பணியைத் தொடக்கியவர் வடிவேலு. பின்னர் சட்டம் படித்து இலண்டனிலுள்ள இன்னர் டெம்பிள் மூலம் பாரிஸ்டராகி மலேசியாவில் வழக்கறிஞராகப் பல்லாண்டு காலம் பணிபுரிந்தார்.

தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தலைவரானபோது புக்கிட் ராஜா சட்டமன்ற உறுப்பினராக வடிவேலு 2 தவணைகள் சிறப்பாக செயலாற்றினார். பின்னர் துன் சாமிவேலு அவர்களின் தலைமைத்துவத்தில் மஇகாவின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.

துன் சாமிவேலு அவர்களால் செனட்டராகவும் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியிலும் சிறப்பாக செயல்பட்டார்.

எம்ஐஇடி அறவாரியத்திலும், டேஃப் கல்லூரி நிர்வாகத்திலும் அவர் செயலாற்றினார்.

அவருக்கு டாக்டர் விஜயவேல் என்ற மகனும் முகுந்தன் என்ற மகனும் உண்டு. முகுந்தன் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.

டான்ஸ்ரீ வடிவேலுவின் நல்லுடலுக்கான இறுதிச் சடங்குகள் கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) மதியம் 12 மணி முதல் நடைபெறும்:

No: 12, Jalan Bukit Desa 3 (Lorong Seputeh), Kuala Lumpur.

பின்னர் அன்னாரின் நல்லுடல் பிற்பகல் 2.00 மணியளவில் அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு செராஸ் கோலாலம்பூர் மாநகரசபை மின்சுடலையில் தகனம் செய்யப்படும்.