சியோல் : நடப்பு தென் கொரிய அதிபர் இராணுவ ஆட்சியைக் கொண்டுவர பரிந்துரை செய்து பின்னர் அந்த முடிவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து யூன் சூக் இயோல் பதவி விலகக் கோரி அந்நாட்டில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அதிபர் தன் முடிவுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட பின்னரும் போராட்டங்கள் தொடர்கின்றன.
தென் கொரிய அதிபருக்கான அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என அவரின் கட்சியில் இருந்தே சில தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் தென் கொரிய அதிபருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட இம்பீச்மெண்ட் என்னும் நம்பகத் தன்மைக்கு எதிரான தீர்மானம் தோல்வியில் முடிந்திருக்கிறது.