Home உலகம் இந்தோனிசியாவின் முன்னாள் அதிபர் ஜோக்கோ வீடோடோ கட்சியிலிருந்து வெளியேற்றம்!

இந்தோனிசியாவின் முன்னாள் அதிபர் ஜோக்கோ வீடோடோ கட்சியிலிருந்து வெளியேற்றம்!

96
0
SHARE
Ad
ஜோகோ வீடாடோ

ஜாகர்த்தா : இந்தோனேசியாவின் மிகப்பெரிய கட்சியான பேஜலிஸ் கட்சியின் (பிடிஐ – பி PDI-P) உறுப்பினர் தகுதியிலிருந்து முன்னாள் அதிபர்  ஜோக்கோ வீடோடோ அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் தனது சொந்தக் கட்சி வேட்பாளரை புறந்தள்ளி, தனது முன்னாள் அரசியல் எதிரியான பிரபோ சுபியாண்டோ அதிபராக வெற்றி பெற ஆதரவு கொடுத்ததற்காகவே, ஜோக்கோ வீடோடோவை அதிகாரப்பூர்வமாக பிடிஐ-பி கட்சி வெளியேற்றியுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இந்தோனிசியா திகழ்கிறது.

இந்தோனேசிய பேஜலிஸ் கட்சியின் தலைவர் மெகாவதி சுகர்னோபுத்ரி, ஜோக்கோவியுடன், அவரது மூத்த மகன், மருமகனையும் கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜோக்கோவி இனி தனது சொந்தக் கட்சியை அமைக்கலாம் அல்லது மற்றொரு அரசியல் கட்சியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு முறை பிரபோவை அதிபர் தேர்தலில் தோற்கடித்த பிறகு, 2024 தேர்தலில் ஜோக்கோவி பிரபோ அதிபராக ஆதரவு கொடுத்து, அவருடன் தனது மூத்த மகனை துணை அதிபராக வெற்றிபெறச் செய்தார்.

மேலும் வடக்கு சுமாத்ராவில் தனது மருமகனை ஆளுநராக்கியுள்ளார். ஜோக்கோவியின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இப்பொழுது பிரபோவின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

ஜோக்கோவி தனது மூத்த மகனை துணை அதிபராக வெற்றி பெற்ற வைக்க,  சர்ச்சைக்குரிய அரசியல் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட்டதாக பிடிஐ-பி குற்றம் சாட்டியுள்ளது. இதுவரை ஜோக்கோவி இக்குற்றச்சாட்டுகளை மறுத்து வந்துள்ளார்.