Home இந்தியா ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் – திமுக வெற்றி – நாதக வைப்புத் தொகை...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் – திமுக வெற்றி – நாதக வைப்புத் தொகை இழந்தது!

69
0
SHARE
Ad
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார்

ஈரோடு : பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போன்று கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

எனினும், பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில், கடந்த சில வாரங்களாக பெரியாரைக் கடுமையாகச் சாடி வந்திருக்கும் நாம் தமிழர் கட்சி இந்த முறை கூடுதலாக வாக்குகள் பெற்றிருக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலெட்சுமி

2021 சட்டமன்ற தேர்தலில் – ஈரோடு கிழக்கில் – நாம் தமிழர் கட்சி 11,629 வாக்குகளைப் பெற்றிருந்தது. அந்தத் தொகுதியில் அதன் வாக்கு சதவீதம் 7.7 ஆக இருந்தது. இந்த முறை அந்த வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. எனினும் தனது வைப்புத் தொகையை நாதக வேட்பாளர் சீதாலெட்சுமி இழந்தார்.

#TamilSchoolmychoice

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து, கடந்த 5 ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், 67.97 சதவிகித வாக்குகள் பதிவாகின.

வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.