Home நாடு நூருல் இசா, பிகேஆர் பெர்மாத்தாங் பாவ் தொகுதி தலைவராக வெற்றி!

நூருல் இசா, பிகேஆர் பெர்மாத்தாங் பாவ் தொகுதி தலைவராக வெற்றி!

62
0
SHARE
Ad
நூருல் இசா

புக்கிட் மெர்தாஜம்: 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பல்லாண்டுகளாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், அவரின் மனைவி வான் அசிசாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்ற தொகுதி பெர்மாத்தாங் பாவ். முதன் முறையாக நூருல் இசா அந்தத் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார்.

எனினும், நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கான பிகேஆர் கட்சித் தேர்தலில் நூருல் இசா, போட்டியின்றி வெற்றி பெற்றார். நூருல் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமாவார். மே மாதம் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் உதவித் தலைவருக்குப் போட்டியிடுவேன் என்றும் நூருல் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நூருல் பினாங்கு பிகேஆர் தலைமைத்துவ மன்றத்தின் தலைவருமாவார்.