
நிபோங் திபால் : கல்வி அமைச்சரும் நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பட்லினா சிடேக், நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற பிகேஆர் நிபோங் திபால் தொகுதித் தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றார். பட்லினா பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவு தலைவியுமாவார்.
இதன் மூலம் மீண்டும் தேசிய மகளிர் தலைவியாக அவர் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 677 வாக்குகள் பெற்ற பட்லீனா, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.
“இந்த வெற்றி தனக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய பொறுப்பு. இதனை நான் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் கையாள்வேன். என் மீது நம்பிக்கை வைத்த நிபோங் திபால் பிகேஆர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என பட்லீனா பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
நிபோங் திபால் தொகுதியின் தலைவராக இருந்த டத்தோ டாக்டர் அமார் பிரிட்பால் அப்துல்லா துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.