Home நாடு ஆயர் கூனிங்: பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணியின் இணைந்த வலிமையைக் காட்டும் வெற்றி!

ஆயர் கூனிங்: பக்காத்தான் ஹாரப்பான் – தேசிய முன்னணியின் இணைந்த வலிமையைக் காட்டும் வெற்றி!

99
0
SHARE
Ad
ஆயர் கூனிங் சட்டமன்றத்தைக் கைப்பற்றிய தேசிய முன்னணி வேட்பாளர் டாக்டர் யூஸ்ரி பாக்கிர்

தாப்பா: சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற்ற ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற்றிருப்பது, பக்காத்தான் ஹாரப்பான், தேசிய முன்னணி இணைந்தால் அவர்களுக்குக் கிடைக்கும் வலிமையைக் காட்டுவதாக அமைகிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இன்றைய இடைத் தேர்தலில் 60.7 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று தேசிய முன்னணி வெற்றி பெற்றது. தேசிய முன்னணி வேட்பாளர் யூஸ்ரி பாக்கிர் 11,065 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வேட்பாளர் அப்துல் முஹாய்மின் மாலிக் (பாஸ்) 6,059 வாக்குகள் பெற்றார். பிஎஸ்எம் கட்சியின் கே.எஸ்.பவானி 1,106 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி வேட்பாளர் 5006 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பெரிக்காத்தானின் வாக்கு வங்கி 33.2 விழுக்காடு அதிகரித்தாலும் தோல்வியைக் கண்டது. பிஎஸ்எம் 6 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வைப்புத் தொகையை இழந்தது.