Home நாடு “மக்கள் கூட்டணி அரசு தமிழ்ப்பள்ளிகளின் காவலனாக விளங்கும்” – சேவியர் ஜெயகுமார் வலியுறுத்து

“மக்கள் கூட்டணி அரசு தமிழ்ப்பள்ளிகளின் காவலனாக விளங்கும்” – சேவியர் ஜெயகுமார் வலியுறுத்து

513
0
SHARE
Ad

ஏப்ரல் 30 – “ மக்கள் கூட்டணி (பக்காத்தான் ராயாட்)ஆட்சியில்  தமிழ்ப்பள்ளிகளின் எந்த நிலமும் அபகரிக்கப் படவில்லை. மாறாக தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியமும்நிலமும் வழங்கித் தமிழ்ப்பள்ளிகளை  வாழ வைக்கும் அரசு இது என்பதற்குச்  சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின்  நில வரியான 4 இலட்சத்து 92 ஆயிரம் வெள்ளிக்கு மேலான  தொகையை  மக்கள் கூட்டணி தலைமையேற்ற சிலாங்கூர் மாநில அரசு உடனடியாக நீக்கம்  செய்ததே  சான்றாகும்” என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

 Xavier-Jeyakumar-Sliderஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் சேவியர் ஜெயகுமார் பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

தனது பத்திரிக்கை அறிக்கையில் சேவியர் கீழ்க்காணுமாறு மேலும் கூறியுள்ளார்:-

நீண்ட நாட்களாகப் பல்வேறு இக்கட்டுகளை ஷா ஆலாம்  சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கியிருந்ததை  மக்கள் அறிவார்கள். அந்தப் பிரச்சனைகளைக் களையப் பல்வேறு  நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் எடுத்து வந்துள்ளது. அதில்  முக்கியமான ஒன்று நில வரியும் உரிமமுமாகும். இப்பிரச்சனை  கடந்த ஆண்டு இறுதியில் நடந்த  ஆட்சிக்குழு கூட்டத்தில்   விவாதிக்கப்பட்டு நில வரி விலக்கு  அளிக்க  உத்தேசிக்கப்பட்டது.”

ஆனால் பள்ளி நிர்வாகம்  சமர்ப்பித்த  வரித் தொகை நிலுவையும், நில அலுவலகம் சமர்ப்பித்த நிலுவையும்  வேறுபட்டதால்,   அதனைச் சரிப்படுத்தி மீண்டும்  சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இறுதியாகப் பெற்றோர் ஆசிரியர் சங்கப் புதிய நிர்வாக உறுப்பினர்கள் வழங்கிய நில வரி பாக்கி தொகையை  முற்றாக  மாநில ஆட்சிக்குழு ரத்து செய்து விட்டது.” 

ஆகச்  சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியுடன் சேர்த்து  அரசாங்க மற்றும்  அரசாங்க துணை நிறுவனங்களின் நிலத்திலும், முன்னாள் தோட்ட நிலங்களில்  செயல் பட்டு வந்த 12 தமிழ்ப்பள்ளிகளின்  நில உரிமத்துக்குப் பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசு தீர்வு கண்டுள்ளது..  மேலும் 7 பள்ளிகளின்  நிலம்  அரசாங்கப் பதிவேட்டுக்கு (கெஜட்டுக்கு) அனுப்பப்பட்டுள்ளது.”

சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் நீண்ட நாள் பிரச்சனைகளைக் களைய மாநில அரசுக்கு  உறுதுணையாக இருந்த முன்னாள் மற்றும் இந்நாள் பெற்றோர்  ஆசிரியர் சங்கத்துக்கும்பள்ளி குறித்துப் பல  ஆவணங்களை  வழங்கிய ஷா ஆலாம் மதியழகனுக்கும்திரு. பசுபதியின் சட்ட அலுவலகத்திற்கும், பள்ளியின் மேல்  அக்கறை கொண்டு  அவ்வப்போதுப் பத்திரிக்கைகளில் அறிக்கை விட்டுவரும்  எல்லாப் பொது  அமைப்புகளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.”

இந்தப் பக்காத்தான்  அரசு கடந்த ஐந்தே ஆண்டுகளில், நம் சமுதாயத்திடம்  இருப்பதைத் தற்காத்து அதற்கு உரிமம் வழங்கி வருகிறது. ஆதலால் மாநிலத்திலுள்ள இந்தியர்களின் சொத்துகளைத் தற்காக்க ஆதாரத்துடன் நிரூபித்து, தகுந்த ஆவணங்களைப் பொது அமைப்புகள் வழங்கினால், மாநில அரசு வழியாக விரைவில் தீர்வு காணலாம்.”  

சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளிக்கு அன்றைய தோட்ட நிர்வாகங்கள் ஒதுக்கியது 10 ஏக்கர் நிலமாக  இருந்தாலும், அரசாங்கத்தில் அங்கம் வகித்த அன்றைய இந்தியப் பிரதிநிதிகள்  குறட்டை விட்டதால் கோட்டை விட்டு விட்டார்கள்.”

 “கடந்த காலத்தில் போராட்டங்களின் விளைவால்  3.6 ஏக்கர் நிலமாவது தமிழ்ப்பள்ளிக்கு மீதப்பட்டதை எண்ணி திருப்திப்பட வேண்டியுள்ளது” என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.