Home இந்தியா முடிவு வரும் முன்பே மோதல் கர்நாடக முதல்வர் பதவி யாருக்கு?

முடிவு வரும் முன்பே மோதல் கர்நாடக முதல்வர் பதவி யாருக்கு?

600
0
SHARE
Ad

karnatakaபெங்களூர், மே 8- கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

அதற்கு முன்பே காங்கிரசில் முதல்வர் பதவியை பிடிக்க ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.கர்நாடகா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்படுகின்றன.

தேர்தல் முடிவுகள் இன்று பகல் 2 மணிக்குள் தெரிந்து விடும். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பின் எடுக்கப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இப்போதே கோஷ்டி மோதல்கள் துவங்கி விட்டன.  முதல்வர் பதவியை பிடிக்கும் முயற்சியில் காங்கிரசின் மாநில தலைவர் பரமேஸ்வர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கட்சியின் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்ணான்டஸ்  மற்றும் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இடையே ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று  முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி சென்றுள்ளார்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கர்நாடக காங்கிரஸ் கட்சி கொள்கையின்படி மாநில தலைவ ராக இருப்பவர்தான் முதல்வராக வரவேண்டும்.

அதன் படி நான்தான் கர்நாடகாவின் முதல்வராவேன்’ என்று கருத்து தெரிவித்தார்.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று நிருபர்களிடம் கூறுகை யில், ‘100 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும். நான்தான் முதல்வராவேன்’ என்றார். மத்திய அமைச்சர் மல்லிகர்ஜூன கார்கே முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

இந்த வேளையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளரும், சோனியாகாந்திக்கு மிகவும் நெருக்கமானவருமான ஆஸ்கர் பெர்ணான்டஸ் முதல் வர் பதவியை பெற ரகசியமாக முயற்சித்துவருவதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.