Home உலகம் காயமடைந்துள்ள இம்ரான் கான் தேர்தலில் வாக்களிக்க முடியாது- டாக்டர்கள் தகவல்

காயமடைந்துள்ள இம்ரான் கான் தேர்தலில் வாக்களிக்க முடியாது- டாக்டர்கள் தகவல்

545
0
SHARE
Ad

IMRANலாகூர், மே 9-  பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் லாகூர் பிரச்சாரத்தின்போது மேடையில் இருந்து விழுந்து காயம் அடைந்தார்.
கழுத்தில் உள்ள எலும்பு மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் இருந்தபடியே, தொலைக்காட்சி மூலம், பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில், இம்ரான் கானுக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால், அவர் நாளை மறுநாள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது காயங்கள் ஆறும்வரை அசையாமல் இருக்க வேண்டும்.

தற்போதுள்ள நிலையில் அவர் வாக்களிப்பதற்காக மியான்வாலி நகருக்கு பயணம் செய்வது சாத்தியமல்ல. 11-ம் தேதிக்கு முன்னர் வெளியாக அனுமதி செய்யப்பட மாட்டார். அவர் பூரண குணமடைவார்.

#TamilSchoolmychoice

ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக கூற முடியாது என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.