Home நாடு பிரச்சனையின்றி லிம் கிட் சியாங் சபாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்!

பிரச்சனையின்றி லிம் கிட் சியாங் சபாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்!

572
0
SHARE
Ad

Lim KIt Siangஜூன் 8 – பல எதிர் கட்சித் தலைவர்கள் சபாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அந்த பட்டியலில் ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்கும்   இருக்கின்றார் என தகவல்கள் வெளியாகியிருந்த வேளையில், இன்று காலை எந்தவித பிரச்சனையுமின்றி லிம் கிட் சியாங் சபா மண்ணில் கால் பதித்தார்.

#TamilSchoolmychoice

சபா மாநிலத்தின் கோத்தா கினபாலு அனைத்துல விமான நிலையத்தில் தான் எந்தவித பிரச்சனையுமின்றி இன்று காலை அனுமதிக்கப்பட்டதாக லிம் கிட் சியாங் ட்விட்டர் இணையத் தளம் வழி காலை 10.35 மணியளவில் அனுப்பிய செய்தியில் கூறினார்.

சபாவுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநுழைவுத் துறை மீதிலான சுதந்திரம், எல்லா மலேசியர்களும் சபாவில் நுழைந்து சட்டபூர்வமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற உரிமையை உள்ளடக்கியதாகும் என்றும் கிட் சியாங் தெரிவித்தார்.

அதே வேளையில் சபா மாநிலத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும் எனவும் சபா முதல்வர் மூசா அமானை கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

சட்டவிரோதமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டு சபாவில் நுழைவதற்கு தடை செய்யப்பட்டிருப்பவர்களை அந்த பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ஜசெக தலைவரான லிம் கிட் சியாங் கூறினார்.

கடந்த மே 30ஆம் தேதி சபாவின் கோத்தா கினபாலுவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இசாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கிட் சியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.