Home உலகம் வெனிசுலாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேறியது

வெனிசுலாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேறியது

653
0
SHARE
Ad

காரகாஸ், ஜூன் 16- வெனிசுலாவில் புதிதாக அதிபர் பதிவியேற்றுள்ள நிகோலஸ் மதுரோ, துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் புதிய மசோதாவில் கையெழுத்திட்டார்.

Venezuela's acting President Nicolas Maduro gestures to supporters after he registered as a candidate for president in the April 14 election outside the national election board in Caracas29 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வெனிசுலாவில் 2009-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 15 மில்லியன் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 3 ஆயிரத்து 400 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்.

இதனை கட்டுப்படுத்த வெனிசுலா நாட்டின் புதிய அரசு துப்பாக்கி காட்டுபாட்டு மசோதாவை எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது.

#TamilSchoolmychoice

சட்டத்திற்கு புறம்பாக ஆயுதங்களை விற்பவர்கள் மற்றும் வைத்திருப்பவர்களுக்கு 20 வருடம் வரை ஜெயில் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.