Home வாழ் நலம் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம்

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம்

618
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 19- உடற்பயிற்சியின் அவசியமெல்லாம் புரியாத வயது  குழந்தை வயது. எனவேதான் பள்ளிக்கூடங்களில் விளையாடுவதற்கென்றே நேரம் ஒதுக்கப்பட்டது.

ஆனால் இன்று, விளையாட்டு நேரத்தை பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள் விழுங்கி விடுகின்றன. விளையாட்டின் மீது பள்ளிகளுக்கே அக்கறை இல்லை என்கிறபோது பிள்ளைகளை என்ன சொல்ல முடியும்? தேர்வும் மதிப்பெண்ணும் முக்கியமாகி விட்டதன் விளைவு இது.

active-childபள்ளிக் கூடங்களில் மறுக்கப்பட்டதை வீட்டிலாவது அனுமதிக்கிறோமா என்றால் அதுவுமில்லை. வீட்டுக்கு வந்ததும், பாடவாரியாக பிரத்தியேக வகுப்பு. அதை முடித்து வீடு திரும்பி  வீட்டுப்பாடம் என்று புத்தகத்தை கையில் எடுக்கும்போதே பையனுக்குத் தூக்கம் வந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் இப்படியே கழிந்தால் பிள்ளைகள் எப்படி உற்சாகமாக இருப்பார்கள்?

#TamilSchoolmychoice

மருத்துவர்களிடம் சென்றால், சத்தான உணவுகளைக் கொடுக்கச் சொல்லி பரிந்துரைக்க மட்டுமே செய்வார்கள். சிலர் வேண்டுமானால், மருந்து மாத்திரைகளையும் பரிந்துரைக்கலாம். மருந்து, மாத்திரைகளை பிஞ்சிலேயே அடிக்கடி எடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்லதா… நீங்களே யோசியுங்கள். மேலும், சோர்வு, அசதி, மந்தம் இவற்றையெல்லாம் வெறும் உணவுப்பழக்கத்தால் மட்டுமே சரிப்படுத்த முடியாது.

குழந்தையின் உடலுக்கு அன்றாடப் பயிற்சி என்பது அத்தியாவசியம். உங்கள் மகனுக்கு என்ன பிரச்னை என்று இப்போது புரிந்திருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது, தொலைக்காட்சி, கைப்பேசி, ஒளிநடா விளையாட்டு, மற்றும் முகபுத்தகம் என இல்லாமல், கொஞ்ச நாளைக்கு அவனை திறந்தவெளியில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை விளையாட அனுமதிப்பதுதான்.

அல்லது, அவனுக்கு என்ன விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதோ அதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள். சைக்கிள் ஓட்டச் சொல்லுங்கள். இவை போதும், சில மாதங்களிலேயே உங்கள் மகனிடம் மாற்றம் கண்டு மகிழ்வீர்கள்.