ஜூன் 19- சித்தார்த், சமந்தா திருமண ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால் தனது கைவசம் உள்ள படங்களை விரைவில் முடிக்கவுள்ளார் சமந்தா.
சமந்தா பெற்றோர் தரப்பிலும் அதிருப்தி இருந்தது. இதுபோல் சித்தார்த் பெற்றோரும் காதலை ஏற்கவில்லை.
இதையடுத்து பெற்றோரை சமரசப்படுத்தி சம்மதம் வாங்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டுள்ளனராம்.
இது நிமிர்த்தமாக சமந்தா நேரடியாக சித்தார்த் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோர்களையும், உறவினர்களையும் சந்தித்து நீண்ட நேரம் பேசி விட்டுச் சென்றுள்ளாராம்.
நீண்ட யோசனைக்கு பின்பு சித்தார்த் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
Comments