Home நாடு சரவாக்கில் மின்தடை – மாநிலம் முழுவதும் இருளில் தத்தளிப்பு!

சரவாக்கில் மின்தடை – மாநிலம் முழுவதும் இருளில் தத்தளிப்பு!

712
0
SHARE
Ad

SarawakTraffic2706e

சரவாக், ஜூன் 28 – சரவாக் மாநிலம் முழுவதும் நேற்று மாலை 5.40 மணியளவில் ஏற்பட்ட மின்தடை காரணமாக இருளில் மூழ்கியது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும், பல சேவை நிறுத்தங்களும் ஏற்பட்டன.

கெமெனா – பிந்துலுவில் மின்சாரக் கம்பிகளுக்கிடையே ஏற்பட்ட உரசல் காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டதாக அம்மாநில எரிசக்தி நிறுவனமான சரவாக் எனர்ஜி சென்டிரியான் பெர்காட் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களும், தொழில் நுட்ப வல்லுநர்களும் தற்போது தீவிரமாக நிலைமையை சரிசெய்ய முயன்று வருகிறார்கள், விரைவில் மின் கம்பிகள் சரி செய்யப்பட்டு மின்சாரம் கிடைக்கும்” என்று அந்நிறுவனம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.

இருப்பினும் நேற்று இரவு 8 மணியளவில் மாநிலத்தின் சில பகுதிகளில் மின்சாரம் கிடைத்ததாகவும், ஆனால் பல குடியிருப்புகள் மற்றும் கடைத்தெருக்கள் இருளில் தத்தளித்தாகவும் பத்து லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் சி சீ ஹவ் தெரிவித்தார்.