Home உலகம் எகிப்தில் மீண்டும் புரட்சி வெடித்தது: லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்

எகிப்தில் மீண்டும் புரட்சி வெடித்தது: லட்சக்கணக்கான மக்கள் போராட்டம்

667
0
SHARE
Ad

கெய்ரோ, ஜூலை. 1- எகிப்தில் அதிபராக இருந்த சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

அது புரட்சியாக மாறியதை தொடர்ந்து முபாரக் பதவி விலகினார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

201121181825754633_20இதற்கிடையே, கடந்த ஆண்டு முதன்முறையாக ஜனநாயக முறையில் அதிபர் தேர்தல் நடந்தது. மக்கள் வாக்கு போட்டு முகமது முர்சியை அதிபராக தேர்ந்தெடுத்தனர். அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் பதவி விலக கோரியும், பொதுமக்கள் மீண்டும் போராட தொடங்கினர்.

#TamilSchoolmychoice

தற்போது அந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக் சாண்டிரா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒரு அமெரிக்க மாணவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

egypt protestபுதிய அதிபராக முகமது முர்சி பதவி ஏற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இந்தநிலையில் அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நேற்று கண்டன பேரணி நடத்தினர். அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் ஏற்கனவே புரட்சி நடந்த சரித்திர புகழ் வாய்ந்த தெக்ரிக் மைதானத்தில் திரண்டனர். மேலும், முர்சி பதவி விலக வலியுறுத்தி 2.5 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கமும் நடத்தினார். இச்சம்பவங்களால் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு எகிப்தில் மீண்டும் புரட்சி வெடித்தது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முர்சி உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் முர்சியின் சகோதரத்துவ கட்சியின் 3 அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதனால் பதட்டமும் பரபரப்பும் நிலவுகிறது.

பாதுகாப்பு பணியில் ராணுவமும், போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கெய்ரோ தக்ரிக் மைதானத்தில் சுமார் 5 லட்சத்துக்கும் மேலானோர் திரண்டு நள்ளிரவு வரை போராட்டம் நடத்தினர்.

அலெக்சாண்டிராவில் சுமார் 2 லட்சம் பேர் தெருக்களில் திரண்டனர். அங்கும் சகோதரத்துவ கட்சி அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதற்கிடையே, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். எனவே, ராணுவத்தினரும் அதிபர் முர்சியின் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேரும் காவலாக நிற்கின்றனர்.