Home நாடு கைரி வீட்டில் கொள்ளையடித்தவர்களின் உருவப்படங்கள் – காவல்துறை தீவிரம்

கைரி வீட்டில் கொள்ளையடித்தவர்களின் உருவப்படங்கள் – காவல்துறை தீவிரம்

644
0
SHARE
Ad

khairy-jamaluddinகோலாலம்பூர், ஜூலை 3 – கடந்த சனிக்கிழமை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில், தொடர்புள்ளதாக  சந்தேககிக்கப்படும் இருவரது உருவப்படங்களை காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர்.

மேலும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் பலருடைய நடவடிக்கைகளையும் காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக காவல்துறையின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் புக்கிட் டாமன்சாராவில் உள்ள கைரியின் வீட்டில் புகுந்த 3 கொள்ளையர்கள், 24 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

#TamilSchoolmychoice

அச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை கொள்ளையர்களைப் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.