மாநில தேசிய முன்னணி சில வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது என்றும் அந்த பட்டியலில் இருந்து ஒரு வேட்பாளரை துணைப் பிரதமர் எதிர்வரும் ஜூலை 9ஆம் தேதி அறிவிப்பார் என்றும் திரெங்கானு மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் சைட் இன்று சனிக்கிழமை அறிவித்தார்.
கோல பெசுட் சட்டமன்றம் தேசிய முன்னணியின் கோட்டை, எனவே கடந்த மே 5ஆம் தேதி 2,434 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் திரெங்கானு மந்திரி பெசார் கூறினார்.
அப்படியே இந்த தொகுதியை எதிர்க்கட்சிகள் வென்றாலும் திரெங்கானுவில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பில்லை என்றும் அகமட் சைட் உறுதியாக கூறினார்.
கோலபெசுட் சட்டமன்றத்தின் நடப்பு உறுப்பினர் டாக்டர் ரஹ்மான் மொக்தார் காலமானதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.