Home இந்தியா முதுமலை யானைகள் முகாமில் ஜெயலலிதா திடீர் ஆய்வு

முதுமலை யானைகள் முகாமில் ஜெயலலிதா திடீர் ஆய்வு

727
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 31 -முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது யானைகளுக்கு கரும்பு மற்றும் வாழைப்பழங்கள் கொடுத்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

31THJAYA_1535478fநீலகிரி மாவட்டம், கோடநாட்டில் இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று சாலை வழியாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள் குறித்தும், அவைகள் பராமரிக்கப்படும் விதம் குறித்தும் வன அலுவலர்களிடம் ஜெயலலிதா கேட்டறிந்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் யானைகளுக்கு பலா, வாழை மற்றும் கரும்பு போன்ற உணவுகளை அவர் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா முதுமலை வனவிலங்குகள் சரணாலயத்தையும் பார்வையிட்டார்.

2005112203340201ஜெயலலிதா முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் செல்லும் வழியில், வழி நெடுக பொது மக்கள் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொது மக்கள் அளித்த உற்சாக வரவேற்பை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.