ஆக . 14- ரசிகர்களின் கனவு கன்னி ஸ்ரீதேவிக்கு இன்று 50 வயது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரிடம் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது.
13 வயதில் பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியானார். 1976–ல் இப்படம் வந்தது. பின்னர் ‘16 வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘மூன்றாம் பிறை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘பிரியா’, ‘கல்யாண ராமன்’, ‘குரு’, ‘மூன்றாம் பிறை’ என பரபரப்பாக பேசப்பட்ட ஹிட் படங்களில் நடித்தார்.
இந்தியில் அறிமுகமானபோது ஸ்ரீதேவிக்கு அந்த மொழி தெரியாது. நடிகை ரேகா பின்னணி குரல் கொடுத்தார். ‘சாந்தினி’ படத்தில் தான் முதன் முதலாக சொந்த குரலில் பேசினார்.
நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படத்தில் நடித்தார். தமிழ், இந்தியில் இப்படம் வந்தது.