Home கலை உலகம் தமிழ், இந்தி திரையுலக கனவு கன்னி ஸ்ரீதேவிக்கு 50 வயது

தமிழ், இந்தி திரையுலக கனவு கன்னி ஸ்ரீதேவிக்கு 50 வயது

894
0
SHARE
Ad

ஆக . 14- ரசிகர்களின் கனவு கன்னி ஸ்ரீதேவிக்கு இன்று 50 வயது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரிடம் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது.

sridevi-kapoor-sweet-acting-stillதமிழகத்தில் உள்ள சிவகாசியில் பிறந்தார். நான்கு வயதில் ‘முருகா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். எம்.ஜி.ஆருடன் நம்நாடு, துணைவன், அகத்தியர், பாபு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

13 வயதில் பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியானார். 1976–ல் இப்படம் வந்தது. பின்னர் ‘16 வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘மூன்றாம் பிறை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘பிரியா’, ‘கல்யாண ராமன்’, ‘குரு’, ‘மூன்றாம் பிறை’ என பரபரப்பாக பேசப்பட்ட ஹிட் படங்களில் நடித்தார்.

#TamilSchoolmychoice

Sridevi-Kapoorதெலுங்கு, மலையாள மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்தார். இந்திக்கு போய் முன்னணி கதாநாயகியானார். அங்கு இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் செட்டில் ஆனார். ஜானவி, குஷி என இரு மகள்கள் உள்ளனர்.

இந்தியில் அறிமுகமானபோது ஸ்ரீதேவிக்கு அந்த மொழி தெரியாது. நடிகை ரேகா  பின்னணி குரல் கொடுத்தார். ‘சாந்தினி’ படத்தில் தான் முதன் முதலாக சொந்த குரலில் பேசினார்.

நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படத்தில் நடித்தார். தமிழ், இந்தியில் இப்படம் வந்தது.