Home உலகம் நட்புறவை புதுப்பிக்க புதிதாக பேச்சுவார்த்தை தொடங்குவோம்: இந்தியாவிற்கு ஷெரீப் அழைப்பு

நட்புறவை புதுப்பிக்க புதிதாக பேச்சுவார்த்தை தொடங்குவோம்: இந்தியாவிற்கு ஷெரீப் அழைப்பு

529
0
SHARE
Ad

இஸ்லாமாபாத், ஆக. 14- இந்திய எல்லைக்குள் அதிகாலை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் சமீபத்தில் 5 வீரர்களை சுட்டுக்கொன்றனர்.

nawasஅதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். இதனால், எல்லையில் ஒரு வாரத்திற்கு மேலாக பதட்டம் நிலவி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

இரு நாடுகளும் சுதந்திரத் தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய பாகிஸ்தான் நட்புறவை மீண்டும் புதிதாக தொடங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாம் புதிய தொடக்கத்தை உருவாக்குவோம். அனைத்து பிரச்சினைகளுக்கும் நட்புறவு மற்றும் அமைதி வழியில் உட்கார்ந்து பேசி தீர்வு காண்போம். இந்தியர்கள் மீது நாங்கள் மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருக்கிறோம். எனவே நாம் சிறந்த நண்பர்களாக மாறவேண்டும். இருவரும் கைகுலுக்கி நட்புறவு பாராட்ட வேண்டும்.

1947 சுதந்திரத்திற்கு முன்பு இந்திய, பாகிஸ்தான் பகுதி மக்கள் ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்தனர். இப்பொழுது 65 வருடங்களை நாம் கடந்துவிட்டோம். இந்நிலையில் இரு நாட்டு மக்களின் வளர்ச்சி, முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உறவுகளை மேம்படுத்துவது அவசியம் ஆகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் தாக்குதலை நிறுத்த இரு நாடுகளும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயம். இவ்வாறு அந்த அறிக்கையில் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.