Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவின் 67-வது சுதந்திர தின கொண்டாட்டம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் கட்டண சலுகை

இந்தியாவின் 67-வது சுதந்திர தின கொண்டாட்டம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் கட்டண சலுகை

581
0
SHARE
Ad

சென்னை, ஆக. 14- இந்தியாவின் 67வது சுதந்திர தின சிறப்பு விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னீட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் இங்கிலாந்து அல்லது அமெரிக்கா செல்வதற்காக பதிவு செய்யும் விமான பயணச்சீட்டுக்களின் விலையில் 15 சதவிகிதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

british-airways-plans-to-raiseஇந்த கட்டண சலுகை லண்டன் மற்றும் வட அமெரிக்கா செல்லும் முதல் வகுப்பு, வர்த்தக வகுப்பு பயணிகளுக்கு அளிக்கப்படும். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை செல்லும் பயணிகள் இந்த கட்டண சலுகைகளை அனுபவிக்கலாம்.

#TamilSchoolmychoice

இந்தியாவில் செயல்பட ஆரம்பித்த சர்வதேச விமானங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் முதலிடத்தில் உள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவில் செயல்பட ஆரம்பித்த 84 ஆண்டு இதுவாகும், இத்தருணத்தில் இந்தியாவின் பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொள்வதில் தாங்கள் பெருமை அடைவதாக தெற்கு ஆசியாவின் பிராந்திய வர்த்தக மேலாளரான கிறிஸ்டபர் போர்டிஸ் தெரிவித்துள்ளார்.