கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில், இரு அணியினரையும் அமைதியை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் நட்பு முறையில் அதிகாரத்தை பறிமாற்றம் செய்யவும் பிரதமர் நஜிப் ஆலோசனை கூறினார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனான சந்திப்பில் பழனிவேல், சுப்ரா, கட்சியின் தேசிய உதவித் தலைவர் எம்.சரவணன் மற்றும் எஸ்.கே தேவமணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கி விடுவார் என்றும், பழனிவேல் வரும் 2016 ஆம் ஆண்டு வரை மீண்டும் ஒருமுறை கட்சியின் தேசியத் தலைவர் பதவி வகிப்பார் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
பழனிவேலுக்குப் பின்னர் சுப்ரா தலைவர் பதவி வகிப்பார். அவர் போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடுவார் என்று தெரிந்தும் கட்சியின் ஒற்றுமைக்காக போட்டியிடுவதில் இருந்து பின்வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், வரும் வியாழக்கிழமை பழனிவேல் மற்றும் டாக்டர் சுப்ரா இருவரும் செய்தியாளர் கூட்டமொன்றில் தங்களில் நிலை குறித்து விளக்கமளிப்பார்கள்.