Home இந்தியா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி! பொருட்கள் அனைத்தும் விலை உயரும் அபாயம்!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி! பொருட்கள் அனைத்தும் விலை உயரும் அபாயம்!

652
0
SHARE
Ad

indian-rupee-vs-us-dollarசென்னை, ஆகஸ்ட் 29 – அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்ந்து அதிகரிப்பதால், இந்தியாவில் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு இதுவரை சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது.

கடந்த சில நாட்களாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.68.8 என்று சரிந்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதி சுமை மேலும் அதிகரிக்கும் நிலை உட்பட பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க, மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இருந்த போதும், மத்திய அரசின் முக்கிய திட்டமான, உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், ஏழை மக்களின் பசியை முற்றிலும் ஒழிக்கும் என வாதங்கள் வைத்தாலும், அதை அமல்படுத்த தேவைப்படும் 90 ஆயிரம் கோடி ரூபாய் சுமையாகும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இது, தற்போதைய பொருளாதார பலவீனத்தை வெளிச்சமிட்டு காட்டி இருக்கிறது.

“ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஒரேயடியாக சீராகாவிட்டாலும், அது அன்னியச் செலாவணி சந்தையில் அதற்குரிய இடத்தை பெறும்’ என, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பங்குச் சந்தை வீழ்ச்சி, தொழில் துறையில் ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கை, இனி அடுத்த தேர்தலில் புதிய ஆட்சி தான், தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் என்ற நிலையை இப்போது உருவாக்கிவிட்டது.

ஏற்கனவே ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் ஏற்பட்டுள்ள அதிக இடைவெளியை சந்திக்க , அரசு முயன்று வருகிறது.

இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பொருளாதார பாதிப்பு நேரடியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதல், நுகர்பொருள், வாகனம், பிரிட்ஜ், மொபைல் போன், “டிவி’ உள்ளிட்ட அன்றாட உபயோக சாதனங்கள் விலையை உயர்த்தும்.

இறக்குமதி மூலம் தயாரிக்கப்படும், உற்பத்தி பொருட்கள் அனைத்தும் விலை உயரும்.தவிரவும் கச்சா எண்ணெய் இறக்குமதி விலையும், டாலர் மதிப்பு உயர்வால் அதிகரிக்கும்.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்படும். சமையல் எண்ணெய் இறக்குமதி விலையும் இனி அதிகமாகும்.மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் அமலாகி செயல்படும் போது, இதன் பாதிப்பு எந்த அளவுக்குஇருக்கும் என்பதை, நேரடியாக உணர முடியும். ஏனெனில், அதிக மானியம் தரப்படும் போது, அத்திட்ட அமலாக்கத்தில் குளறுபடி மற்றும் கசிவு காரணமாக ஏற்படும் பாதிப்பு, பெருமளவில் இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.