Home அரசியல் அம்னோ உதவித் தலைவர் பதவிக்கு முக்ரிஸ் போட்டி!

அம்னோ உதவித் தலைவர் பதவிக்கு முக்ரிஸ் போட்டி!

488
0
SHARE
Ad

Mukhriz-Mahathir---Sliderஅலோர்ஸ்டார், செப். 20- அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அம்னோ கட்சி தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப்போவதாக கெடா மந்திரிபுசார் டத்தோ படுக்கா முக்ரிஸ் மகாதீர் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தேசிய நிலையில் கட்சி பதவிகளுக்கு போட்டியிடவிருக்கும் கெடா அம்னோ வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் உரையாடிய அவர் இந்த அறிவிப்பை செய்தார்.

மாநில அம்னோ தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட  கருத்துகளையும் ஆலோசனைகளையும் பரிசீலைனை செய்த பின்னர் தாம் இந்த முடிவை  எடுத்ததாக முக்ரிஸ் கூறினார்.

#TamilSchoolmychoice

உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும்  மூன்றாவது தலைவர் முக்ரிஸ்.

டத்தோஸ்ரீ அலிருஸ்தாமும், டான்ஸ்ரீ அப்துல் இசா முகமதும் இப்பதவிக்கு போட்டியிடும் தங்களின் விருப்பத்தை முன்பே அறிவித்துவிட்டனர்.