Home வணிகம்/தொழில் நுட்பம் அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்ட தானியங்கி ரோபோ: இந்திய விஞ்ஞானி சாதனை

அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்ட தானியங்கி ரோபோ: இந்திய விஞ்ஞானி சாதனை

672
0
SHARE
Ad

sarangapani (1)வாஷிங்டன், செப். 30– அமெரிக்காவில் தானியங்கி ரோபோவை இந்திய விஞ்ஞானி உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

பலவிதமான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தானாக சிந்தித்து இயங்கும் மிகவும் அதிநவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் ஜெகநாதன் சாரங்கபாணி (படம்) தயாரித்துள்ளார். இவர் மிஸ்சோரி பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையில் பணி புரிகிறார்.

#TamilSchoolmychoice

இந்த ரோபோவினால் படிக்கவும், தன்னைதானே பராமரித்து கொள்ளவும் முடியும். திறனாய்வு செய்து ஒரு வேலையை முழுமையாக செய்து முடிக்கும் திறனும் இதற்கு உண்டு.

இதற்காக எந்திரங்களால் ஆன உணர்வுகளை அறிய கூடிய வகையில் மூளை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து உத்தர விடப்படும் கட்டளைப்படி இந்த ரோபோ மனிதர்களை போன்று துல்லியமாக செயல்படுகிறது.

இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.