கோலாலம்பூர், செப் 30 – குற்றத்தடுப்பு சட்டம் (Prevention of Crime Act ) 1959 ல் செய்யப்படும் திருத்தத்தின் மூலம் விசாரணையின்றி தடுத்து வைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டாலும், நீக்கப்பட்ட உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (Internal Security Act) போல் அது கடுமையாக இருக்காது என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களுக்கு எதிராகப் போராடும் ஆற்றலை, இச்சட்டதிருத்தம் காவல்துறைக்கு வழங்குகிறது என்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த கூட்டத்தில் நஜிப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சட்டதிருத்தம் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை போல் உள்துறை அமைச்சருக்கும், காவல்துறைக்கும் நிறைய அதிகாரத்தை வழங்கவில்லை. மாறாக மூவர் அடங்கிய சட்டத்துறை குழுவிடம் இருந்து தான் கைது ஆணை போன்றவை பெறப்படும் என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.