Home கலை உலகம் தமிழ்ப் படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆசை: தெலுங்கு நடிகர் ஆதித்யா

தமிழ்ப் படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆசை: தெலுங்கு நடிகர் ஆதித்யா

572
0
SHARE
Ad

செப். 30- தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று எல்லா மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் பால ஆதித்யா.

இவர் நடித்த படங்களில் ‘சண்டிகாரு’, ‘சுந்தராணிக்கி- தொந்தரக்குவ’, ‘1940ல் ஓககிராமம்’ (தேசிய விருது பெற்ற படம்), முன்னணி நடிகர் கிருஷ்ணா இணைந்து மற்றொரு கதாநாயகனாக ‘ரூம் மெட்ஸ்’ போன்ற படங்களில்  நடித்து இன்றைய தெலுங்கு பட உலகில் கதாநாயகனாக  உயர்ந்து இருக்கும் இவருக்கு தமிழ் படங்களிலும் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசையாம்.

2013_1_7_4_34_54_BALADITYAஇயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் ‘கையளவு மனசு’  சின்னத்திரையில் நடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அவரது தயாரிப்பில் ‘சின்னஞ்சிறு உலகம்’ என்ற சின்னத்திரையிலும்  நடித்து அவரது பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அஜீத்துடன் இணைந்து ‘ரெட்டை ஜடை வயசு’ படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும், அவர் தமிழ் படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் நல்ல வேடங்கள் கிடைத்தால் அதிலும் நடித்து சிறந்த முன்னணி நடிகராக உயர வேண்டும் என்பதுதான் ஆதித்யாவின் லட்சியம் என்று கூறுகிறாராம்.

தமிழில் பெயர் வைக்காத சில படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.