Home 13வது பொதுத் தேர்தல் சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்: தேமு வெற்றியடைய இளைஞர் பிரிவு கடுமையாக உழைக்க வேண்டும் – கைரி

சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்: தேமு வெற்றியடைய இளைஞர் பிரிவு கடுமையாக உழைக்க வேண்டும் – கைரி

510
0
SHARE
Ad

khariyகோலாலம்பூர், அக் 5 – சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்காக அம்னோ இளைஞர் பிரிவு கடுமையாக உழைக்கப் போகிறது என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

சுங்கை லிமா தொகுதியில் மொத்தமுள்ள 27,222 வாக்காளர்களில் 11,000 வாக்காளர்கள் இளைஞர்கள் என்றும், அவர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் கைரி குறிப்பிட்டார்.

“இதன் காரணமாக, அம்னோ இளைஞர் பிரிவு நிறைய திட்டங்களை ஒருங்கிணைக்கிறது. இளைஞர்கள் ஒன்றுபட இனம் சார்ந்த நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபட வைப்போம்” என்று நேற்று செய்தியாளர்களிடம் கைரி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சுங்கை லிமாவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ அஸிஸான் அப்துல் ரசாக் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி வரும் அக்டோபர் 23 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், நவம்பர் 4 ஆம் தேதி வாக்களிப்பும் நாளும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.