Home நாடு மலேசியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு ‘ஐ கார்டு’! அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது!

மலேசியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு ‘ஐ கார்டு’! அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது!

537
0
SHARE
Ad

kadகோலாலம்பூர், அக் 5 – மலேசியாவில் வேலை செய்து வரும் வெளிநாட்டினருக்கு ‘ஐ கார்டு’ என்ற புதிய அடையாள அட்டையை அரசாங்கம் அடுத்த மாதம் வழங்கவுள்ளது.

இந்த அடையாள அட்டை குறியீட்டு எண் மற்றும் பட்டை உள்ளீட்டு எண் (Bar code) போன்ற பல அம்சங்களோடு வரும் நவம்பர் 15 ஆம் தேதி வழங்கப்படுகிறது.

இது குறித்து உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி கூறுகையில், “அடுத்த மாதம் இந்த அடையாள அட்டை சுமார் 2.3 மில்லியன் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இந்த புதிய அடையாள அட்டையின் மூலம் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு பணியாளர்களை முறையாக வழி நடத்தலாம்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இனி வெளிநாட்டு பணியாளர்கள் வெளியே செல்லும் போது கடவுச்சீட்டை(Passport) எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்றும், இந்த அடையாள அட்டை மட்டும் போதும் என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு பணியாளர்களின் வேலைக்கு ஏற்றவாறு இந்த அடையாள அட்டைகளின் வண்ணங்கள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.