Home இந்தியா ஐராவதம் மகாதேவனுக்கு தொல்காப்பியர் விருது !

ஐராவதம் மகாதேவனுக்கு தொல்காப்பியர் விருது !

735
0
SHARE
Ad

award1புது தில்லி, அக் 10- தமிழறிஞர் ஐராவதம் மகாதேவனுக்கு, வாழ்நாள் சாதனையாளருக்கான தொல்காப்பியர் விருதை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கெளரவித்தார். டில்லியில் ஜனாதிபதி மாளிகையில், நேற்று 2009-10ம் ஆண்டு மற்றும் 2010-11ம் ஆண்டிற்கான தமிழ் செம்மொழி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ் மொழிக்கு அரும்பணியாற்றிய ஐராவதம் மகாதேவன், தமிழண்ணல் பெரியகருப்பன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தொல்காப்பியர் விருதை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

முனைவர் ஐரோஸ்லேவ் வசேக், ஜான் ராஸ்சன் ஆகியோருக்கு குறள் பீட விருது வழங்கப்பட்டது. தொல்காப்பியர் விருது, குறள் பீட விருது பெற்றவர்களுக்கு தலா, 5 லட்சம் ரூபாயும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.

மேலும் 2009-10ம் ஆண்டிற்கான இளம் தமிழ் அறிஞர் விருது டி. சுரேஷ் , எஸ்.கல்பனா, ஆர். சந்திரசேகரன், வாணி அறிவாளன், சி. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கும், 2010 -11ம் ஆண்டிற்கான விருது டி. சங்கையா, ஜெயகுமார், ஏ.மணி, சிதம்பரம், சுந்தரபாண்டியன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. இவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ் செம்மொழிக்கான மத்திய மையம் இந்த விருதுகளை வழங்குகிறது.