பாஸ் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் சுங்கை லிமாவில் நேற்று இரவு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதனிடையே, சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில், தங்களது வேட்பாளராக பேராசிரியர் டாக்டர் அகமட் சொஹைமி லாஸிமை (வயது 52) அறிவித்திருக்கிறது தேசிய முன்னணி.
சொஹைமி பெண்டிக்கன் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி முன்னாள் கெடா மந்திரி பெசாரும், சுங்கை லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ அஸிஸான் அப்துல் ரசாக் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
சுங்கை லிமாவ் இடைத்தேர்தலில் நாளை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.