Home வாழ் நலம் தூக்கம் மிக முக்கியம்

தூக்கம் மிக முக்கியம்

561
0
SHARE
Ad

INSOMNNI

கோலாலம்பூர், நவம்பர் 25- ஓர் இரவு முழுவதும் உங்களால் தூங்காமல் இருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை அதற்கு என்றுதான் நிறைய பேர் கூறுவார்கள். ஆனால், உலகில் 7  முதல் 18 சதவீதம் பேர் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் இவர்களில் 3 முதல் 13 சதவீதம் பேர் தூக்கம் மற்றும் மன அமைதிக்கான  மாத்திரைகளை உட்கொண்டால்தான் உறங்க முடிகிறது என்றும் அறிவிக்கிறது மருத்துவ ஆய்வு.

ஒரு நாளில் 7 முதல் 10 மணி நேரம் தூங்கினால், உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அது குறைந்தாலோ, கூடினாலோ ஏதோ ஒரு  நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்பதை உணர்ந்து உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

#TamilSchoolmychoice

குழந்தைகள் அதிகம் தூங்குவதையோ,  முதியவர்கள் மிகக்குறைவாக தூங்குவதையோ பிரச்னையாக கருதத் தேவையில்லை.

குழந்தைகள் 16 மணி நேரம் வரை கூட உறங்குவார்கள். முதியவர்கள் 4 மணி நேரம் ஆழ்ந்து தூங்கினாலே, அது அவர்கள் வயதுக்கு நல்ல  தூக்கம்தான்.