நியூ யார்க், நவம்பர் 25- பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட மலாலா யூசப்சாய்க்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கிழக்கு பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போர்க் நகரில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற விழாவில் ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் மார்டின் ஸ்க்கல்ஸ் மலாலாவிடம் சகாரோவ் பரிசை வழங்கி வாழ்த்தினார்.
50 ஆயிரம் யூரோக்கள் ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசை உலகெங்கும் உள்ள மனித உரிமை பிரசாரகர்களுக்கு அர்பணிப்பதாக மலாலா கூறினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் மெக்சிகோ நகரின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சர்வதேச சமஉரிமை மற்றும் ஒருமைப்பாட்டு பரிசுக்கு மலாலாவின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத,இன,வயது பாகுபாடின்றி கல்வி உரிமையை நிலைநாட்டவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் அருந்தொண்டாற்றிமைக்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது என்றும் பரிசளிப்பு விழா அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.