Home 13வது பொதுத் தேர்தல் மசீச தேர்தல்: தேசியத் தலைவர் பதவிக்கு ஓங் டி கியாட் போட்டி!

மசீச தேர்தல்: தேசியத் தலைவர் பதவிக்கு ஓங் டி கியாட் போட்டி!

690
0
SHARE
Ad

articlesMCA_ong_tee_keat_1024x576.jpg.transformed_1கோலாலம்பூர், நவ 25 – வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலில், தேசியத் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக முன்னாள் மசீச தலைவர் டத்தோஸ்ரீ ஓங் டி கியாட் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஓங்,“என்னுடைய பலவீனங்களை உணர்ந்து புதிய மனிதனாக தற்போது இருக்கின்றேன். இனி கட்சியை மக்களுக்கு மிக நெருக்கமானதாக மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றேன்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஓங், கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மசீச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில் ஓங், பாண்டான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.