Home உலகம் நெல்சன் மண்டேலாவுக்கு உலக தலைவர்களின் புகழஞ்சலி

நெல்சன் மண்டேலாவுக்கு உலக தலைவர்களின் புகழஞ்சலி

540
0
SHARE
Ad

article-2351653-1A8D9068000005DC-337_634x400

ஜோஹன்னஸ்பர்க், டிசம்பர் 6 – இளம் வயதிலேயே புரட்சிக்காரராக மாறி தென் ஆப்பிரிக்க விடுதலைக்காக பாடுபட்டவர் மண்டேலா. வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலாவான நெல்சன் மண்டேலா  நேற்று தனது 95 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

மறைந்த தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு உலகத்தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கலையும், புகழஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்டோர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களும் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தலைவர்களின் இரங்கல்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி : மண்டேலா மனித நேயத்தின் வெளிப்பாடாக திகழ்ந்தார். காந்திக்கு இணையாக வேறு யாரையும் சொல்ல முடியாத நேரத்தில் அந்த இடத்தை மண்டேலா பிடித்தார். அவர் மறக்க முடியாத தலைவர் ஆவார் என ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கூறியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்: ஒரு சிறந்த ஒளியாக திகழ்ந்த மண்டேலா மறைந்து விட்டார்.

பிரதமர் மன்மோகன்சிங்: மாபெரும் மனிதரான மண்டேலா உண்மையான காந்தியவாதியாக திகழ்ந்தார்.

ஒபாமா : அவரின் கொள்கை எதுவும் இல்லாமல் எந்தவொரு அரசியலும் இல்லை. இவரது போதனைகள் எனக்கு ஒரு பாடமாக இருந்தன. அவர் இல்லாத உலகை நினைத்து பார்க்க இயலவில்லை.

சுஷ்மா சுவராஜ்: அநியாங்களை எதிர்த்து போராடி வெற்றி கண்ட போற்றுதலுக்குரிய மனிதர் மண்டேலா.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்: உலக சிறந்த மனித நேய மிக்க மனிதரை இழந்து விட்டோம்.

நரேந்திரமோடி: காந்திய சிந்தனைகளுடன் வாழ்ந்தவர் மண்டேலா.

ஆஸி பிரதமர் டோனி அப்போட்: மண்டேலா ஒரு சிறந்த மனிதர், ஜனநாயகத்திற்கு அரும்பாடுபட்டவர்.