Home நாடு 2014 ஆண்டிற்கான BR1M உதவித்தொகை விண்ணப்பங்கள் தொடக்கம்!

2014 ஆண்டிற்கான BR1M உதவித்தொகை விண்ணப்பங்கள் தொடக்கம்!

578
0
SHARE
Ad

semak+br1mகோலாலம்பூர், டிச 18 – வரும் 2014 ஆம் ஆண்டிற்கான ஒரே மலேசியா உதவித் தொகைக்கான (BR1M) விண்ணப்பங்கள் வரும்  திங்கட்கிழமை தொடங்கி ஜனவரி 31 ஆம் தேதி  வரை வரவேற்கப்படுகின்றன என்று நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்களை இணையத்தின் மூலமாகவும் செய்ய முடியும் என்றும், விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிபரங்களான முகவரி, வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வரும் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

2014 ஆம் ஆண்டிற்காண பட்ஜெட்டில், பிரதமர் நஜிப் துன் ரசாக், 3000 மற்றும் அதற்கும் குறைவான வருமானமுள்ள குடும்பத்திற்கு 500 முதல் 650 ரிங்கிட் வரையிலும், திருமணமாகாத 21 வயதுடையவர்கள் மாதம் 2000 ரிங்கிடிற்குக் குறைவாக வருமானம் பெற்றால் அவர்களுக்கு 250 ரிங்கிட் முதல் 300 ரிங்கிட் வரையும்,  தனியாக வசிக்கும் 60 வயதிற்கு அதிகமாக உள்ள முதியவர்கள் 500 ரிங்கிட் முதல் 650 ரிங்கிட் வரையிலும் உதவித்தொகையைப் பெறலாம் என்று அறிவித்தார்.