Home அரசியல் “டோல் உயர்வுக்கு சிலாங்கூர் அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” – அன்வார் வேண்டுகோள்

“டோல் உயர்வுக்கு சிலாங்கூர் அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” – அன்வார் வேண்டுகோள்

661
0
SHARE
Ad

anwarபெட்டாலிங் ஜெயா, டிச 18 – கெசாஸ் மற்றும் ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலைகளில் 30 சதவிகித பங்குகளும், எல்.டி.பி இல் 20% சதவிகித பங்குகளும் உள்ள சிலாங்கூர் அரசாங்கம், நெடுஞ்சாலை டோல் கட்டணத்தை அதிகரிக்கும் புத்ரஜெயாவின் திட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் இவ்விவகாரம் குறித்து இன்று செயல்குழுவில் பேச வேண்டும் என்றும் அன்வார் கூறியுள்ளார்.

“நான் இவ்விவகாரம் குறித்து டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிடம் கலந்துரையாடினேன். சிலாங்கூர் அரசாங்கம் டோல் வரி உயர்வுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டார். டோல் வரி உயர்வைத் தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தேசிய முன்னணி அரசாங்கம் கூறும் காரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றும் அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், சிலாங்கூரில் அமைக்கவிருக்கும் புதிய நெடுஞ்சாலைகளுக்கு பல நிபந்தனைகளை விதிக்கவும் காலிட் ஒப்புக்கொண்டார் என்றும் அன்வார் தெரிவித்தார்.

அந்த நெடுஞ்சாலைகள் டேஸ், கிடெக்ஸ், சூக் மற்றும் கேஎல்ஓஆர்ஆர் ஆகியவையாகும்.