Home கலை உலகம் போலி துப்பாக்கி சூடு நடிகர் சல்மான்கானை சிக்க வைக்க முயற்சி

போலி துப்பாக்கி சூடு நடிகர் சல்மான்கானை சிக்க வைக்க முயற்சி

479
0
SHARE
Ad

salman_350_042213033718புதுடெல்லி, டிசம்பர் 23-  பாலிவுட் நடிகர் சல்மான்கானை சிக்கவைக்க போலி துப்பாக்கி சூடு நடத்திய சினிமா தயாரிப்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஹர்தேவ்சிங்(47). இவர் மும்பையில் சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளார். அதற்காக மும்பையில் சினிமா அலுவலகமும் வைத்துள்ளார்.

இவர் கடந்த செப்டம்பர் 16ம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில்,  “சம்பவத்தன்று காலை சந்தை பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது  இருசக்கர வாகனத்தில் இருவர் என்னை பின் தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது துப்பாக்கி குண்டுகள் காரின் கதவை துளைத்து அருகில் உள்ள சுவரின் மீது பட்டு தெரித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினேன்.  என்மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீதும் மற்றும் அவரது மேலாளர் ரேஷ்மா ஷெட்டி மீது சந்தேகம் உள்ளது” என புகாரில் தெரிவித்து இருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த புகாரை பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில்,  இது திட்டமிட்டு நடத்தப்பட்ட போலியான துப்பாக்கி சூடு என தெரிய வந்தது. இது குறித்து துணை ஆணையர் அலோக் குமார் கூறியதாவது,“ஹர்தேவ் தெரிவித்த புகாரை பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஹர்தேவ் சிங்கின் மனைவி ஜஸ்மீத் சேத்தி, தனது மகளுடன் மும்பையிலுள்ள சினிமா தொழிலை கவனித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, தங்களின் சினிமா சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியின் பாடலுக்காக நடிகர் சல்மான்கானை ஆட வைக்க முயற்சித்துள்ளனர். அதற்காக அவரது மேலாளரை பார்த்து ஒப்புதல் கேட்டுள்ளனர். அதற்கு சல்மானின் மேலாளர் ரேஷ்மா அதிக தொகை பேசியுள்ளார். இதனால் ஜஸ்மித் சேத்தி, சல்மான்கானை அவரது வீட்டில் தனியாக சந்தித்து பேச முயன்றுள்ளார். இதில் இரு தரப்பிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஜஸ்மீத் சல்மான்கானின் வீட்டின் வெளியே நின்று கூச்சல்போட்டுள்ளார். இதனால் ஜஸ்மீத் மீது மும்பை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது பற்றி விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, சந்தேகமடைந்த காவல்துறையினர், ஹர்தேவ்சிங் தொலைப்பேசி உரையாடலை சோதனை செய்தனர். அதனடிப்படையில், சிங்கின் உறவினர் தேவேந்தர் என்பவரை கைது  செய்து விசாரித்தனர். அப்போது, சல்மான்கான் மற்றும் அவரின் மேலாளர் இருவரால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதோடு, தன்னுடைய குடும்பத்தாரை மும்பை காவல்துறையிடம் சிக்க வைத்து விட்டனர்.

அவர்களை பழிவாங்க வேண்டும் என ஹர்தேவ் தன்னிடம் கூறினார். அதனால், என்னுடைய மற்றொரு நண்பர் குர்ஜிந்தர்சிங் ஜித் என்பவருடன் சேர்ந்து கூட்டாக இந்த போலியான துப்பாக்கி சூடு நடத்தினோம் என தேவேந்தர் கூறினார். பின் ஹர்தேவ் சிங்கும் இதை ஒப்பக்கொண்டார். இதனடிப்படையில், தேவேந்தரிடம் இருந்த கைத்தொலைப்பேசி, மோட்டர் சைக்கிள், ஆகியவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து,  குர்ஜிந்தர் சிங் ஜித்தை காவல் அதிகாரிகள் தேடி வருகின்றனர்” என்றும் ஆணையர் கூறினார்.