கோலாலம்பூர், ஜன 21- புத்தம் புது தொழில்நுட்பங்களுடன் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S5 என்ற செல்பேசி விரைவில் வெளிவரவுள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் வருகிற பிப்ரவரி மாதம் 24 ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரையிலும் Mobile World Congress(MWC) கூட்டம் நடைபெற உள்ளது. அந்நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி S5 வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன் வடிவமைப்பில் புதிய பொருள் ஒன்று பயன்படுத்த இருப்பதாகவும், அதன் மூலம் திறன்பேசியின் திரை (Display) வளையும் தன்மை கொண்டதாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கேலக்ஸி S5 இரண்டு வகையான மாதிரிகளில் வெளிவரும், ஒன்று முழுவதுமாக உலோகம் அமைப்பிலும், இன்னொன்று பிளாஸ்டிக் அமைப்பிலும் வரும். இவற்றின் இரண்டிற்கும் நடுவே விலைகளில் வேறுபாடு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதில் உலோக அமைப்பில் உருவாகும் செல்பேசி, சாம்சங் கேலக்ஸி எப் (Samsung Galaxy F) என அழைக்கப்படும்.