Home கலை உலகம் காதல் கிசுகிசுவில் அதர்வா-ப்ரியாஆனந்த்!

காதல் கிசுகிசுவில் அதர்வா-ப்ரியாஆனந்த்!

487
0
SHARE
Ad

priya anandh

சென்னை, பிப் 6 – பாணா காத்தாடியில் சமந்தாவுடன் நடித்த அதர்வா, அதன்பிறகு அமலாபால், வேதிகா ஆகிய நடிகைகளுடனும் நடித்தார். ஆனால், அப்போதெல்லாம் எந்த நடிகைகளுடனும் அவரை இணைத்து கிசுகிசுக்கள் பரவியதில்லை.

இப்போது முதன்முறையாக இரும்புக்குதிரையில் நடித்த ப்ரியாஆனந்துடன், காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார் அதர்வா. இருவரும் காதல்  காட்சிகளில் துளிகூட செயற்கைத்தனம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தினார்கள். நிஜ காதலர்களை தவிர மற்றவர்களால் இந்த அளவுக்கு காதல் காட்சிகளில் நடிக்க முடியாது என தற்போது ஒரு செய்திகள் கோடம்பாக்கத்தில் உலவிக்கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஆனால், இதைப் பற்றி ப்ரியாஆனந்த் கூறியதாவது, “நாங்கள் இருவருமே சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதால், எங்கள் திறமையை காட்ட கிடைக்கிற சந்தர்ப்பங்களை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். அப்படித்தான் இந்த படத்திலும் காதல் காட்சியில் நிஜமாகவே பிரதிபலித்தோம். ஆனால், கேமராவுக்கு வெளியே நாங்கள் நல்ல நண்பர்கள். அதை மீறி எங்களுக்கிடையே எதுவும் இல்லை. அதனால் தவறான கற்பனைகளுக்கு இடம் கொடுக்காமல், இந்த விசயத்தை இத்தோடு விட்டுவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.