Home நாடு இடைத்தேர்தலில் ‘பாலியல் அவதூறு’ பிரச்சாரங்கள் தடுக்கப்பட வேண்டும் – ஷபி அப்டால்

இடைத்தேர்தலில் ‘பாலியல் அவதூறு’ பிரச்சாரங்கள் தடுக்கப்பட வேண்டும் – ஷபி அப்டால்

624
0
SHARE
Ad

IMG_0351.storyimageகோலாலம்பூர், பிப் 6  – காஜாங் இடைத்தேர்தலில், ‘பாலியல் அவதூறுகள்’ குறித்த பிரச்சாரங்களை தவிர்க்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் கடுமையான விதிமுறைகளை விதிக்க வேண்டும் என்று கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷபி அப்டால் கூறினார்.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், சட்டவிதிகள் நிறையவே வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை அமலாக்கம் செய்வது தான் இல்லை. காஜாங் இடைத்தேர்தலில் வரையறுக்கப்பட்ட விதிமுறைக்குள் பிரச்சாரம் செய்யும் படி அறிவுறுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்” என்று தெரிவித்தார்.

அம்னோ கட்சியைச் சேர்ந்த அகமட் மஸ்லான் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையொன்றில், காஜாங்கில் போட்டியிடவுள்ள எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றிய ‘பாலியல்’ குற்றச்சாட்டுக்களையும், காணொளிகளையும் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், அது போன்ற அன்வாருக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தான் ஆதரவு அளிக்கப்போவதாக ஷபி குறிப்பிடவில்லை.