பி.ஜி.டபிள்யூ ஸ்டூடியோஸ் (BGW Studios) என்ற தனது சொந்த நிறுவனம் மூலமாக தொடர்ந்து பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை படம் பிடித்து வெளியிட்டும் வருகின்றார்.
நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குநர் துறையிலும் ஆர்வம் கொண்ட துடிப்புள்ள இளைஞரான பாலகணபதி, தற்போது ‘GoodBye’ என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.
‘தற்கொலை’ குறித்த கதையை மையமாகக் கொண்ட இக்குறும்படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களை இயக்குவதை தான் மிகவும் விரும்புவதாக பாலகணபதி தெரிவித்தார்.
இக்குறும்படம் அண்மையில் ‘Yahoo’ இணையத்தளத்தின் ‘Cilli padi short film contest’ க்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– பீனிக்ஸ்தாசன்