Home One Line P2 ஆஸ்ட்ரோ : அதிரடி, சஸ்பென்ஸ், காதல் நிறைந்த ‘அதிகாரி’ – தீபாவளி திரையீடு

ஆஸ்ட்ரோ : அதிரடி, சஸ்பென்ஸ், காதல் நிறைந்த ‘அதிகாரி’ – தீபாவளி திரையீடு

812
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இப்புதிய இயல்பின் போது, உள்ளூர் திரைப்படங்கள் சமீபத்தில் வீட்டு ‘பாக்ஸ் ஆபிஸ்’ வசூலில் வளர்ந்துள்ளன. இது உயர்தர, புதிய பொழுதுபோக்கிற்கான தேவையைப் பூர்த்தி செய்கின்றது.

இத்தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 11, 2020 முதல் Astro First (அலைவரிசை 480)-மூலமாக ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் முதல் உள்ளூர் தமிழ்த் திரைப்படமான “அதிகாரி” திரைப்படத்தை ஆஸ்ட்ரோ ஷா (Astro Shaw) முதல் ஒளிபரப்பு செய்கின்றது.

#TamilSchoolmychoice

ஒரு மர்மக் கொலையாளி குறித்து காவல் துறை விசாரணையை ஒட்டிய ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர், அதிகாரி. இந்த 2 மணிநேர 9 நிமிட திரைப்படம், பார்வையாளர்களை அதன் அதிரடி, சஸ்பென்ஸ், நகைச்சுவை, காதல் மற்றும் இதயத்தைத் தூண்டும் காட்சிகள், பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கும் உணர்ச்சிகளின் பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும்.

தமிழ் கலைஞர் விருதை 2018-இல் ‘ஜாங்கிரி’ திரைப்படத்திற்காக ‘சிறந்த இயக்குநர்’ விருதை வென்ற இயக்குநர் கபிலன் புலோன்ரன் கைவண்ணத்தில் மலர்ந்த அதிகாரி, சமீபத்தில் அதிகாரப்பூர்வ விளம்பரக் காணொளியை (டீசர்) வெளியிட்டதிலிருந்து இரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

இயக்குநர், நாடக நடிகர் மற்றும் ‘Polis Evo 2’ திரைப்படத்தில் நடிப்பு பயிற்சியாளராக பணியாற்றிய பாரேட் அயாம் (முஹமட் பாரேட் ஜமாலுதீன்), இத்திரைப்படத்தில் இடம்பெற்ற திறமையான உள்ளூர் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்யை வழங்கினார். பால கணபதி வில்லியம், கர்ணன் கணபதி, நந்தினி கணசென், சசிகுமார் கந்தசாமி, ஸ்ரீ குமரன் முனுசாமி, திலக் நாயர், அக்ஷரா நாயர், விஷாலினி சிவா, குபேன் மகாதேவன், பிரமிலா, சஹா, ஹெவோக் ஜெகா மற்றும் கீர்த்தி உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் நடிகர்களைத் தாங்கி மலர்கின்றது, அதிகாரி.

நந்தினி கணசென், அதிகாரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், “இத்திரைப்படம் ஆரம்பத்தில் மார்ச் மாதத்தில் சினிமா வெளியீட்டிற்காக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதிகாரி திரைப்படத்தை, குறிப்பாக மலேசியர்கள் தீபாவளியின் போது கண்டு இரசிக்க முடியும் என்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இத்திரைப்படம் வயது மற்றும் இனங்களைக் கடந்து அனைத்து மலேசியர்களையும் ஈர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. முக்கிய கதாபாத்திரம் சைகை மொழியைப் பயன்படுத்தி தொடர்பு கொள்வது இத்திரைப்படத்தின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், தீபாவளி கொண்டாட்டங்களை மிகவும் உற்சாகப்படுத்துவதோடு இரசிகர்களின் ஆதரவைப் பெறும் என்று பெரிதும் நம்புகிறோம். இது, தொடர்ந்து உள்ளூர் தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும்” என்றார்.

ராஜா ஜஸ்தினா ராஜா அர்ஷத், துணைத் தலைவர், ஆஸ்ட்ரோ ஷா & நுசந்தரா (Astro Shaw & Nusantara), கூறுகையில், “இப்புதிய இயல்பின் போது உள்ளூர் தயாரிப்பு குழுக்கள் மற்றும் அவர்களின் திரைப்படங்களை ஆதரிப்பதற்கான எங்களின் முயற்சிகளில், ஆஸ்ட்ரோ ஷா பல்வேறு மொழிகளின் மலேசிய திரைப்படங்களுக்காக இணைந்து பணிபுரிய காத்திருக்கிறோம். எதிர்வரும் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, Astro First-இல் முதல் உள்ளூர் தமிழ் திரைப்படத்தை முதன்முதலில் வழங்குவதில் ஆஸ்ட்ரோ ஷா உற்சாகமாக உள்ளதோடு மகிழ்ச்சியடைகிறது. தமிழ் படங்களுக்கு அவற்றுக்குரிய இரசிகர் பட்டாளம் இருந்தாலும், உயர்தர தயாரிப்புகள் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டு இரசிகர்களைக் கவர்ந்திழுக்கும், அதன் பிடிமான கதைக்களம் மற்றும் உணர்ச்சிபூர்வமான கூறுகளின் அடிப்படையில், அதிகாரி மற்ற உயர்தர உள்ளூர் தயாரிப்புகளைப் போலவே சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. Astro First-இல் இந்த அறிமுகத்தின் மூலம் இது உள்ளூர் தமிழ் திரைப்படங்களின் வரம்பை விரிவுபடுத்துவதோடு உள்ளூர் திரைப்படத் துறையை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி நகர்த்துகிறது என நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம்.”

ஒரு கொலை செய்யப்பட்ட அதிகாரியின் வழக்குகளை வழிநடத்த மற்றொரு காவல்துறை அதிகாரி பொறுப்பேற்கிறார். கொலையாளி ஒரு வழக்கோடு தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கிறார். கொலையைப் பார்த்தில் அதிர்ச்சியடைந்த மற்றும் பேச முடியாமல் போன பாதிக்கப்பட்டவரின் மகளின் உதவியுடன் அவ்வதிகாரி ஓர் அரிய நோயையும், நிறைவேற்றுவதற்கான பெரிய திட்டத்தையும் கொண்ட கொலையாளியை எப்படிக் கண்டுபிடித்தார், எனும் கதையை அதிகாரி சித்தரிக்கின்றது.

வரம்பற்ற எண்ணிக்கையில் 48 மணி நேரத்திற்கு மேல், ரிம 15-க்கு Astro First (அலைவரிசை 480)-இல் அதிகாரி-ஐ கண்டு களிக்கலாம் அல்லது ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.

அதிகாரி குறித்த மேல் விவரங்களுக்கு ஆஸ்ட்ரோ ஷாவின் சமூக வலைத்தளங்களை வலம் வாருங்கள்.