Home One Line P1 செல்லியல் காணொலி : “தமிழ்ப்பள்ளிகளுக்கான தனி மானியம் அறிவிக்கப்படும்” – சரவணன்

செல்லியல் காணொலி : “தமிழ்ப்பள்ளிகளுக்கான தனி மானியம் அறிவிக்கப்படும்” – சரவணன்

784
0
SHARE
Ad

Selliyal | “Allocation for Tamil Schools – details soon” – Saravanan | 09 November 2020
“தமிழ்ப்பள்ளிகளுக்கான தனி மானியம் அறிவிக்கப்படும்” சரவணன்

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தமிழ் பள்ளிகளுக்கு என பிரத்தியேக  நிதி ஒதுக்கீடு  எதுவும் இல்லை என்னும் கண்டனங்கள் பரவலாக எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும், இந்திய சமூக இயக்கங்களும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

மஇகா தேசியத்தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் இதுகுறித்துக் கருத்தரைத்தபோது வரவு செலவு திட்டம் இந்திய சமூகத்தைப் பொறுத்தவரையில் திருப்திகரமாக இல்லை, ஏமாற்றத்தைத் தருகிறது எனக் கூறியிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் தமிழ் பள்ளிகளுக்கு என பிரத்தியேகமாக 50 மில்லியன் ரிங்கிட், வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு வந்தது.

நஜிப் துன் ரசாக் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியின் போது வழங்கப்பட்ட இந்த ஒதுக்கீடு, கடந்த ஆண்டு நம்பிக்கை கூட்டணி ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டது.

எனினும் இந்த ஆண்டு புதிய தேசியக் கூட்டணி, ஆட்சி ஏற்ற பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட முதல் வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் பள்ளிகளுக்கு என ஒதுக்கீடுகள் பிரத்தியேகமாக வழங்கப்படவில்லை.

மாறாக கல்வி அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் பள்ளிகள் மேம்பாட்டுக்கு என ஒட்டுமொத்தமாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது

இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்குமான மானியத்திலிருந்து தமிழ்ப்பள்ளிகளுக்கான தனி மானிய ஒதுக்கீடு எவ்வளவு என்பது விரைவில் அறிவிக்கப்படுமென மனிதவள அமைச்சரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அவர் வழங்கியிருக்கும் விளக்கத்தை செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட காணொலியில் காணலாம்.