Home நாடு அன்வார் காஜாங்கில் போட்டியிட முடியாமல் போகலாம்!

அன்வார் காஜாங்கில் போட்டியிட முடியாமல் போகலாம்!

447
0
SHARE
Ad

1146-370x290கோலாலம்பூர், மார்ச் 6 – ஓரினச்சேர்க்கை மேல்முறையீட்டு வழக்கில் இன்றும், நாளையும் விசாரணை நடைபெறுவதால், காஜாங் இடைத்தேர்தலில் அன்வார் போட்டியிட முடியாமல் போகலாம் என்று பிகேஆர் கட்சியைச் சேர்ந்த சிம் தெரிவித்துள்ளார்.

பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினரான சிம் திஸ் திஸின் கூறுகையில், “அன்வாரின் அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வர தேசிய முன்னணி அரசாங்கம் கடைசி நேர அழுத்தத்தை கொடுக்கிறது”

“மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது விசாரணையை வெள்ளிக்கிழமை தான் முடிக்கிறது. அதன் பின்னர் திங்கட்கிழமை மதியம் தான் தீர்ப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் காலையில் நாடாளுமன்ற கூட்டமும் உள்ளது”

#TamilSchoolmychoice

“அன்வாரின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அன்றைய தினம் அவரது வழக்கறிஞர்களால் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாமல் போகலாம். காரணம் அலுவலக நேரம் அதற்குள் முடிந்துவிடும். எனவே அன்வார் சிறையில் அடைக்கப்படலாம்” என்று தெரிவித்தார்.

வரும் மார்ச் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேட்புமனுத் தாக்கலில் அன்வார் மனுத்தாக்கல் செய்ய முடியாமலும் போகலாம். காஜாங் இடைத்தேர்தலில் அன்வாருக்கு தொல்லை கொடுக்க தேசிய முன்னணி செய்யும் அரசியல் விளையாட்டு என்றும் சிம் குறிப்பிட்டார்.