Home தொழில் நுட்பம் விண்டோஸ் 8 ஐ பயன்படுத்த எளிய வழிமுறைகள்!

விண்டோஸ் 8 ஐ பயன்படுத்த எளிய வழிமுறைகள்!

528
0
SHARE
Ad

windows-8.1-startமார்ச் 6 – மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய பதிப்பான விண்டோஸ் 8 மற்றும் 8.1 இயங்குதளத்தினைப் பயன்படுத்துபவர்களுக்கு மிக எளிதாக அதை பயன்படுத்தும் வகையில் பல முக்கிய Shortcut keys கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதை பயன்படுத்துவதன் மூலம் சுழலி (Mouse) இன்றி, விசைப்பலகை (keyboard) மூலமாகவே பல முக்கிய செயல்பாடுகளை செய்ய முடியும்.

விண்டோஸ் கீயுடன் சேர்ந்து கீழ்காணும் விசைகளை அழுத்தும் போது அதற்குத் தகுந்த செயல்பாடுகள் நடக்கின்றன.

#TamilSchoolmychoice

+ D: நீங்கள் எந்த விண்டோவில் இருந்தாலும் இது டெஸ்க்டாப்பிற்கு உங்களை அழைத்துச் செல்லும். விண்டோஸ் கீயினை மாற்றி மாற்றி அழுத்துகையில், அது விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் டெஸ்க் டாப்பிற்கு மாறி மாறி கொண்டு செல்லும்.

+ I: செட்டிங்ஸ் பேனல்(Settings Panel) திறக்கப்படும். இந்த ஷார்ட் கட் கீ,Control Panel, Personalization menu, Power menu (sleep, shut down, or restart) எனப் பல வசதிகளை உங்களுக்கு அளிக்கும்.

+ X: அட்வான்ஸ்டு விண்டோஸ் செட்டிங்ஸ்(Advanced Windows Settings) மெனு திறக்கப்படும். System, Device Manager, Command Prompt, மற்றும் பல வசதிகளை இதன் மூலம் பெறலாம்.

+ F: பைல்களைத் தேடும் வசதி கிடைக்கும். இந்த வசதி, குறிப்பாக பைல்களைத் தேடிப் பெறத் தரப்படுகிறது.

+ Period (“.”): அப்ளிகேஷன்களை ஒதுக்குகிறது. திரையின் வலது பக்கத்திற்கு அப்ளிகேஷன் ஒதுக்கப்படும். இதனால், மீதம் உள்ள விண்டோவின் இடத்தில், பல பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம். Windows Key + Shift + Period அழுத்தினால், அப்ளிகேஷன் இடது புறம் ஒதுக்கப்படும்.

+ E: கம்ப்யூட்டர் திறக்கப்படும். உங்கள் பைல்களையும், அடிக்கடி நீங்கள் திறந்து பயன்படுத்தும் போல்டர்களையும் இதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.

+ L: ஸ்கிரீன் லாக் செய்யப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பணியிலிருந்து நீங்கள் உடனே விலகிச் செல்ல எண்ணினால், இந்த ஷார்ட் கட் கீ, ஸ்கிரீனில் உங்கள் செயல்பாடு லாக் செய்யப்படும். இதே கீயினை, பயனாளர் மாற்றிச் (switch users) செயல்படவும் பயன்படுத்தலாம்.

+ left arrow (and right arrow): அப்போதைய விண்டோவினை மூடும் அல்லது மாற்றும். இடது அம்புக் குறியுடன் செயல் படுத்தினால், அப்போதைய விண்டோ, திரையின் இடது புறமாக பெரிதாக்கப்படும். வலது அம்புக் குறி, வலது புறமாக இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளும்.

+ 0 – 9: டாஸ்க் பாரில் உள்ள அப்ளிகேஷன் களையும் புரோகிராமினையும் இயக்கத்திற்குக் கொண்டு வரும். டாஸ்க் பாரில் ஏற்கனவே பின் அப் செய்யப்பட்ட புரோகிராம்களை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.

இந்த எண் அவற்றின் வரிசை எண்ணைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 3 என்ற கீயுடன் செயல்படுத்தினால், மூன்றாவதாக உள்ள அப்ளிகேஷன் புரோகிராம் இயக்கத்திற்கு வரும்.

+ PrintScreen: ஸ்கிரீன் ஷாட் எடுக்க இதனைப் பயன்படுத்தலாம். இவ்வாறு எடுக்கப்படும் ஸ்கிரீன் ஷாட் படத்தினை, நீங்கள் தனியே பெயிண்ட் போன்ற ஒரு இமேஜ் புரோகிராமில் ஒட்டிப் பயன்படுத்த வேண்டியதில்லை. தானாகவே, அது Pictures என்னும் Folder ல் சேமிப்பு செய்யப்படும்.