Home தொழில் நுட்பம் விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

690
0
SHARE
Ad

windows-10-phones-970-80கோலாலம்பூர், மார்ச் 19 – விண்டோஸ் 8 ஏற்படுத்திய வர்த்தக தாக்கத்தை சரி செய்யும்  நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் 10, கோடை காலத்தில் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் டெர்ரி மயர்சன் இது தொடர்பாக தனது வலைப்பதிவில் கூறியிருப்பதாவது:- “கோடை காலத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்”.

“சுமார் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் விண்டோஸ் 10 அனைத்து கருவிகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கணினிகளில் தான் மேம்படுத்த வேண்டும் என்பதில்லை திறன்பேசிகளிலும் மேம்படுத்திக் கொள்ளலாம்”.

#TamilSchoolmychoice

“மேலும் தொழில் நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இந்த இயங்குதளத்தை ‘இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்’ (Internet of Things) கருவிகளிலும் மேம்படுத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

விண்டோஸ் 10 வெளியீடு பற்றிய ஆருடங்களில் மிக முக்கியமானதாக கூறப்படுவது, விண்டோஸ் 10 இயங்குதளத்தை அனைவருக்கும் இலவசமாக்குவது என்பதாகும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த இயங்குதளத்தை விண்டோஸ் 8 வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமல்லாமல் அதன் ‘பைரேட்’ (Pirate) பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எந்தவொரு வர்த்தக நோக்கமும் இல்லாமல் ஏன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இயங்குதளத்தை இலவசமாகத் தர வேண்டும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுவது இயற்கை. அங்கு தான் நாதெல்லாவின் வர்த்தக சூது அடங்கி உள்ளது.

இயங்குதளத்தை அனைவரும் இலவசமாக பெறலாம், ஆனால் சேவைகள், மேம்பாடுகள் அனைத்தும் கட்டணமுறையில் நடைபெறும். எனினும், இது பற்றிய முழு தகவல்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.