Home கலை உலகம் ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

753
0
SHARE
Ad

jyothika-re-entry-film-titled-36-vayathinile-600சென்னை, மார்ச் 19 – திருமணத்துக்குப் பிறகு முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் புதிய படத்துக்கு ‘36 வயதினிலே’. சூர்யாவை காதலித்து திருமணம் செய்த ஜோதிகா, இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

முதல் படமாக, மலையாளத்தில் ‘மஞ்சு வாரியார்’ நடித்து பெரும் வெற்றிப் பெற்ற ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தை தமிழ் பதிப்பில் நாயகியாக நடிக்கிறார் ஜோதிகா.

இந்தப் படத்தை சூர்யா தனது ‘2டி என்டர்டெயின்மென்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஒரு காட்சியில் சிறப்புத் தோற்றத்திலும் வருகிறாராம். தற்போது இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகிய்யுள்ளது.

#TamilSchoolmychoice

மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ்தான் தமிழ்ப் பதிப்பையும் இயக்குகிறார். இப்படத்தின் முன்னோட்டத்தை இதுவரை 1,97,000 –த்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.